முகப்புகோலிவுட்

மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படப்பிடிப்பு தொடங்கியது!

  | July 19, 2019 14:25 IST
Vaanam Kottatum

துனுக்குகள்

  • பொன்னியின் செல்வன் படத்தை இயக்குகிறார் மணிரத்னம்
  • மனிரத்னம் தயாரிக்கும் படம் வானம் கொட்டட்டும்
  • இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
இயக்குநர் மணிரத்னம் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கானநடிகர் நடிகைகள் தேர்வுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே, பல முன்னணி நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
இதற்கிடையில் இயவருடைய மணிஸ் டாக்கிஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் “வானம் கொட்டட்டடும்” படத்தை தயாரிக்கிறார் மணிரத்னம். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
 
இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டின் இவர்களுடன் சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
 
இப்படத்தில் பின்னணி இசை பாடகராக இருந்த சித் ஸ்ரீராம் இந்த படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com