முகப்புகோலிவுட்

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு! தாய்லாந்து செல்கிறதா படக்குழு?

  | September 20, 2019 17:51 IST
Ponniyin Selvan

துனுக்குகள்

  • மணிரத்னம் இப்படத்தை இயக்கவிருக்கிறார்
  • இப்படத்தில் அமிதாப் பச்சன், ஐஷ்வர்யா நடிக்கவுள்ளனர்
  • இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்கவிருப்பதாக செய்தி
இயக்குநர் மணிரத்னம் ‘செக்கச்சிவந்த வானம்' படத்தை அடுத்து கல்கியின் வரலாற்று புனைவான ‘பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்க திட்மிட்டுள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்த படத்தில் நடிக்க கோலிவுட் பாலிவுட் நடிகர்கள் பலர் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
 
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், அனுஷ்கா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதனை உறுதி செய்யும் விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாக வில்லை. நடிகை ஐஸ்வர்யா ஒரு நிகழ்ச்சியில் இதனை உறுதி படுத்தினார். இவரைத் தொடர்ந்து ஜெயராம் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். சமீபத்தில் நடிகர் பார்த்திபனும் டுவிட்டர் பக்கத்தில் அவர் நடிப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் அமலா பால் ஆகியோரும் படத்தில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தினர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் மணிரத்னம். 100 நாட்கள் கொண்ட ஒரே ஷெட்யூலில் படத்தின் முக்கியமான பாகங்களை தொடர்ந்து படமாக்க தயாராகி வருகிறார்கள். பொன்னியின் செல்வனை தாய்லாந்தின் அடர்ந்த காடுகளுக்குள் படமாக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்