முகப்புகோலிவுட்

தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு இரண்டு நடிகைகள் இறக்குமதி

  | February 01, 2019 19:50 IST
Vidya Balan

துனுக்குகள்

  • தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடிக்கிறார் மஞ்சு வாரியர்
  • சில்க் சிமிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தவர் வித்யாபாலன்
  • அஜித்துடன் பிங்கி ரீமேக் படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன்
தமிழ் திரையுலகம் பெரும்பான்மையான ரசிகர்களை கொண்டது. நல்ல திறமையை கொண்டாடும் குணம் படைத்தவர்கள் தமிழ்த்திரைப்பட ரசிகர் பெருமக்கள். ஆகவேதான் மற்ற மொழி கலைஞர்களின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் இருக்கிறது. தொடர்ந்து நல்ல கலைஞர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

அந்த அடிப்படையில் இந்த ஆண்டின் புதிய வரவாக வித்யாபாலன், மஞ்சு வாரியர் ஆகிய இருவரும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளனர். வித்யா பாலன் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சில்க் சுமிதா வாழ்க்கை கதையை மையமாக வைத்து வெளியான த டர்டி பிக்சர் படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார்.
 
தற்போது அவர் முதல் முறையாக பிங்க் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகும் படத்தில் அஜித்குமாருடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இதில் அஜித் மனைவியாக அவர் வருகிறார் என்றும் வழக்கறிஞர் தொழிலில் அஜித்தை ஊக்கப்படுத்துவதுபோல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன.
 
இவரைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் கொடிகட்டி பறக்கும்  மஞ்சு வாரியர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அவரது படங்கள் வசூலிலும் சக்கபோடு போடுகின்றன.
 
இப்போது தமிழில்  தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்த வருகிறார்.
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்