முகப்புகோலிவுட்

ராதிகா “ஒரு பேய்” 42 ஆண்டுக்கால சாதனையை வாழ்த்திய மனோபாலா.!

  | August 12, 2020 20:58 IST
42 Years Of Cinema

‘இயக்குநர் இமயம்’ பாரதி ராஜாவின் இயக்கத்தில் 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்பட கதாநாயகியாக அறிமுகமானவர் ராதிகா.

நடிகை ராதிகா சமீபத்தில் திரைத்துறையில் வெற்றிகரமான 42 ஆண்டுகளை நிறைவு செய்தார். எப்படிப்பட்ட கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடித்து அசத்தக்கூடிய அவரை, ரசிகர்கள் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் சமூகவலைத்தளங்கள் மற்றும் ஃபோன் கால்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

இப்போது, மூத்த நடிகர்-இயக்குநர் மனோபாலாவும் தனது சமீபத்திய வீடியோவில் அவரை வாழ்த்தியுள்ளார். அவர் கூறுகையில், ராதிகா சத்தியமாக ஒரு உழைப்பின் அடையாளம், அவரைப்போல் உழைக்க முடியாது, பேயாக வேலை செய்பவர் என்றும், அவரை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் கூறினார். மேலும், அவரது பயணம் கண்டிப்பாக தொடரும், அந்த பயணத்தில் தானும் ஒரு சிறிய பங்கெடுத்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறிய அவர், ராதிகாவுக்கு இனியும் வெற்றி மட்டுமே கிடைக்கும் என்று கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அந்த வீடியோ பதிவிற்கு ராதிகா மனோபாலாவுக்கு நன்றி தெரிவித்ததோடு, “நன்றி மனோ, உங்களுடன் சில மறக்கமுடியாத வேலைகளைச் செய்துள்ளேன், அதில் ரஜினியின் கிளாசிக் ஊர்க்காவலன், மோகனுடன் பிள்ளை நிலா, ஜிதேந்திராவுடன் ஹிந்தியில், விஜயகாந்த் மற்றும் பலருடன் நடித்துள்ளேன். ஆம் இது கடின உழைப்புக்கான வெற்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

ராதிகா முன்னதாக ஒரு பதிவில் “நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, நான் தினமும் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, எனது சிறந்ததைக் கொடுத்து, என் வேலையை வளர்த்துக் கொண்டேன், அதுதான் இந்த பயணத்தை எனக்குக் கொடுத்தது, இது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்தது மற்றும் எனக்கு அன்பும் வலிமையும் நிறைய அளித்தது. அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

‘இயக்குநர் இமயம்' பாரதி ராஜாவின் இயக்கத்தில் 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான ‘கிழக்கே போகும் ரயில்' என்ற திரைப்பட கதாநாயகியாக அறிமுகமானவர் ராதிகா. அவர், பிரபல மூத்த நடிகர் நடிகர் வேல் எம்.ஆர்.ராதா அவர்களின் மகளாவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு இவர் நடிப்பில் 2 படங்கள் வெளிவர, இந்த 2020ஆம் ஆண்டு ‘வானம் கொட்டட்டும்' என்ற படம் வெளியானது. மேலும் 5 படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com