முகப்புகோலிவுட்

கிரிக்கெட்டை ரொம்ப மிஸ் பண்ணும் ‘Master’ நடிகர்.!

  | May 13, 2020 19:03 IST
Lockdown

தற்போது விஜயுடன் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்து, படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் ஷாந்தனு, இரண்டு புதிய படங்களில் ஹீரோவாவும் ஒப்பந்தமாகியுள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று பரபல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள இந்த பூட்டுதல் காலத்தில் ஷாந்தனு மக்களிடையே மிகவும் நெறுக்கமாகிவிட்டார் எனக் கூறலாம், காரணம் தினமும் புகைப்படம், வீடியோ, கருத்துப்பதிவு, சுவாரஸ்யமான செய்திகள், சக நடிகர்களுடனான உறையாடல் என ஏதோ ஒரு வகையில் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுகிறார்.

தனது தந்தை கே. பாக்யராஜின் ‘வேட்டிய மடிச்சு கட்டு' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய ஷாந்தனு, ‘சக்கரகட்டி' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். மேலும் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், அவர் கிரிக்கெட் மிளையாட்டின் மீதும், நடனத்தின் மீதும் அதிக ஆர்வம் கொண்டுள்ளார் என்பது பலருக்குக்கும் தெரியும்.

இந்நிலையில், கிரிக்கெட் விளையாடுவதை ரசிக்கும் ஷாந்தனு, இன்ஸ்டாகிராமில் ஒரு மறக்க முடியாத கிரிக்கெட் நினைவைப் பகிர்ந்துள்ளார். விரைவில் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப விரும்பும் அவர், தனது பதிவில் “உங்கள் அணியையும் விளையாட்டையும் இழக்கும் போது???? #LoveForCricket @madrasallstars #MAS. பசங்களோடு விளையாடுவதை தவறவிடுகிறேன்... மீண்டும் களத்தில் இறங்க காத்திருக்கிறேன்... இந்த முறை இன்னும் ஃபிட்டாக மற்றும் பலமாக????” என்று கூறியுள்ளார்.

சில சினங்களுக்கு முன், ஷாந்தனு ஒரு பொழுதுபோக்கு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் மற்றும் நடுவர் என அனைத்தும் அவர் ஒரே ஆள் ஆல்-ரவுண்டராக இருந்து கிரிக்கெட் விளையாடுவதைப் போல் செய்திருந்தார். இது போன்ற அவரது வலைதள இடுகைகள் அவர் இந்த விளையாட்டை எவ்வளவு இழக்கிறார் என்பது தெரிகிறது.

சினிமாவைப் பொருத்தவரை, ஷாந்தனு கடைசியாக மணிரத்னம் தயாரிப்பில் ‘வானம் கொட்டட்டும்' திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் காணபட்டார். அதையடுத்து, தற்போது விஜயுடன் ‘மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து, படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். மேலும், இரண்டு புதிய படங்களில் ஹீரோவாவும் ஒப்பந்தமாகியுள்ளார். 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com