முகப்புகோலிவுட்

கமல் பாடலை பாடி, சென்னை போலீஸுக்கு நன்றி சொன்ன 'மாஸ்டர்' நடிகை!

  | May 13, 2020 10:54 IST
Andrea Jeremiah

'மன்மதன் அம்பு' படத்தின் 'ஹூஸ் தி ஹீரோ' பாடலின் சில வரிகளை அவர் பாடினார்

தரமணி, விஸ்வரூபம், ஆயிரதில் ஓருவன், வட சென்னை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா, அவரது பாடும் திறனுக்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார், மேலும் அவரது தனித்துவமான குரலால் பார்வையாளர்களை ஈர்த்துள்ளார்.

ஆண்ட்ரியா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் ‘மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த ‘லாக்டவுன்' என்ற விழிப்புணர்வு குறும்படத்தை நடித்து வெளியிட்டார். மேலும், அடிகர் மற்றும் புகைப்பட கலைஞருமான சுந்தர் ராமுவுடன் இணைந்து குவாரன்டைன் போட்டோ ஷோட் நடத்தி அஅந்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், பல அருமையான உணவுகளை சமைத்து அசத்தி ரசிகர்களை அசத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா ஜெயேமியா தனது சமூக ஊடக ட்விட்டர் பக்கத்தில் சென்னை காவல்துறையினருக்கு, அவர்களின் சேவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 'மன்மதன் அம்பு' படத்தின் 'ஹூஸ் தி ஹீரோ' பாடலின் சில வரிகளை அவர் பாடி தொடங்கி அந்த வீடியோவில் “நீங்கள் நகரத்துக்காகவும், நாட்டிற்காகவும், அனைவருக்காகவும் மிகவும் கடினமாக உழைத்து வருகிறீர்கள். நீங்களே நிறைய கஷ்டங்களுக்கும் வைரஸ் பாதிப்புக்கும் ஆளாகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மிகப்பெரியநன்றி. தயவுசெய்து இதயத்தை இழக்காதீர்கள், தயவுசெய்து நம்பிக்கையை இழக்காதீர்கள். எல்லாம்சரிஆகிவிடும்அதுதான்நம்மநம்பிக்கை. விஷயங்கள் மீண்டும் சிறப்பாக வரும் என்று நாம் நம்புகிறோம், காத்திருப்போம்” என்றார்.

தனுஷின் 'வட சென்னை' படத்தில் கடைசியாக நடித்த இந்த ஆண்ட்ரியா அடுத்து தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் தோன்றவுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com