முகப்புகோலிவுட்

Just Listen Bro..! - வெளியானது மாஸ்டரின் ‘குட்டி கதை’

  | February 14, 2020 17:15 IST
Thalapathy

இப்பாடலின் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்

மாஸ்டர் திரைப்படத்திற்காக விஜய் பாடிய முதல் பாடல் ‘ஒரு குட்டி கதை' வெளியாகி வைரலாகிவருகிறது.

‘தளபதி' விஜய் நடிக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என்று ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கெனவே இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை படு குஷியில் ஆழ்த்தியது.

தற்போது, இப்படத்திற்காக விஜய் பாடிய ‘ஒரு குட்டி கதை' பாடல் முதல் சிங்கிளாக வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். அனிருத்தின் துள்ளலான இசையில் மிரட்டலாகப் பாடியுள்ளார் ‘தளபதி'. இப்பாடல் வெளியீட்டை ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடிவருகின்றனர்.

ஏ.ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடிய 'வெறித்தனம்' பாடல் இணையத்தில் வெளியான நாள் முதல் பல நாட்களாக ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து, அதிக பார்வைகளைக் கொண்டு சாதனைகள் படைத்து வந்தது. அதேபோல் அனிருத் இசையில் தர்பார் முதல் சிங்கிள் ‘சும்ம கிழி' பாடலும் கொண்டாடப்பட்டது. தற்போது அனிருத் இசையும் விஜயின் வசீகரக் குரலும் இணைந்துள்ள இந்த இப்பாடலும் வைரல் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்