முகப்புகோலிவுட்

நிஜ வாழக்கை கதாப்பாத்திரம் தான் ‘மாஸ்டர்’, உண்மையை உடைத்த இணை எழுத்தாளர்!

  | May 15, 2020 13:10 IST
Master

ஆண்ட்ரியா ஜெரேமியா, இப்படத்தில் ஒரு சுவாரசியமான கார் சேஸிங் காட்சி இடம் பெற்றுள்ளதாகக் வெளிப்படுத்திருந்தார்.

2020-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பாரக்கப்படும் திரைப்படமாக ‘தளபதி' விஜயின் ‘மாஸ்டர்' உள்ளது. கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதியே வெளியாகவிருந்த இப்படம், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பூட்டுதல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, படத்தின் ரிலீஸ் தாமதமாகைவருகிறது. ஆனால், இப்படம் திட்டமிட்டபடி வெளியாகியிருந்தால், இச்சமயம் ரூ.300 கோடி வசூலை ஏட்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

பூட்டுதலுக்கு முன், இப்படத்தை முழுதாக முடிக்க, இன்னும் 15 நாட்களுக்கான எடிட்டிங் வேலைகள் மட்டுமே இருப்பதாகக் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். எதிர்பார்த்தபடி, இப்படத்தின் எடிட்டிங் வேலைகள் சமீபத்தில் தொடங்கியுள்ளன. இன்னும் இரண்டு வாரங்களில் அனைத்து வேலைகளும் முடிக்கப்படு, ட்ரைலர் அல்லது டீஸர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

தற்போது, 'மாஸ்டர்' திரைப்படத்தின் இணை எழுத்தாளர்களில் ஒருவரான பொன் பார்த்திபன் சமீபத்தில், ஒரு தனியான ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘மாஸ்டர்' திரைப்படம் ஒரு உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்தியுள்ளார். லோகேஷ் கங்கராஜ், தான் சந்தித்த நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கதையை வடிவமைத்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், கதை கூறப்பட்டபோது ‘நானா..?' என விஜய் ஒரு சமயம் யோசித்ததாகவும், அப்படிப்பட்ட வித்தியாசமான கதாப்பாத்திரமாக இருக்கும் என்றும், மேலும், படத்தில் பல ட்விஸ்ட்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சமீபத்தில், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா ஜெரேமியா, இப்படத்தில் ஒரு சுவாரசியமான கார் சேஸிங் காட்சி இடம்பெற்றுள்ளதாகக் வெளிப்படுத்திருந்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com