முகப்புகோலிவுட்

மாஸ்டரின் ரொமான்ஸ் லுக் வேற லெவல்.!! வைரலாகும் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ லிரிக்கல் வீடியோ..!

  | March 23, 2020 15:46 IST
Master

அனிருத் இசையில் யுவன் சங்கர் ராஜா பாடிய ‘அந்த கண்ண பாத்தாக்கா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.

மாஸ்டர் திரைப்படத்திலிருந்து அனிருத் இசையில் யுவன் சங்கர் ராஜா பாடிய ‘அந்த கண்ண பாத்தாக்கா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி' விஜய் தனது 64-வது திரைப்படமாக 'மாஸ்டர்' அமைந்துள்ளது. இத்திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் ‘குட்டி ஸ்டோரி' பாடல் கடந்த மாதம் காதலர் தினத்தன்று வெளியாகி செம வைரலானது. அதையடுத்து, ‘வாத்தி கம்மிங்', ‘வாத்தி ரெய்டு' என அடுத்தடுத்து வெளியான மிரட்டலான பாடகள் விஜய் ரசிகர்களை இரங்கி ஒரு டான்ஸ் போடவைத்தது.

மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, முன்னதாக வெளியான 3 பாடல்களுடன் மொத்தம் எட்டு பாடல்கள் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் போது பேசிய இசையமைப்பாளர் அனிருத் “இன்னும் இரண்டு பாடல்கள்” இருப்பதாகவும், விரைவில் அவற்றையும் வெளியிடப்படுவதாக கூறினார்.

தற்போது கொரோனா தொற்று காரனமாக பல திரைப்படங்கள் வெளியாகாமல் தள்ளிப்போடப்பட்டுள்ள நிலையில், ‘மாஸ்டர்' திரைப்படம் அறிவித்த நாளில் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், அதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரசிகர்களை கொஞ உற்சாகப்படுத்தும் விதமாக ‘அந்த கண்ண பாத்தாக்கா' பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விஜயின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com