முகப்புகோலிவுட்

ராஜமௌலியின் RRR படத்தில் ‘தளபதி’ விஜய் நடிக்கிறாரா..??

  | March 28, 2020 08:41 IST
Rrr

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மோஷன் போஸ்டர் இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. 

‘தளபதி' விஜய் கடைசியாக அட்லி இயக்கத்தில் ‘பிகில்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து  முடித்துள்ளார். இப்படத்தின் இசை சமீபத்தில் வெளியானது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் 65-வது படத்தின் இயக்குநர் குறித்த எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகமாக உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பெற ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், விஜய் குறித்த ஒரு சூப்பரான தகவல் ஒன்று வைரலாகிவருகிறது. அது என்னவென்றால், ‘மாஸ்டர்' விஜய் ராஜமௌலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'பாகுபலி' என்ற பிளாக்பஸ்டரைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிவரும் மெகா பட்ஜெட் படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் கேமியோ வேடத்தில் விஜய்யை நடிக்கவைக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது, ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், பிரபுதேவா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்த 'ரவுடி ரத்தோர்' எனும் பாலிவுட் படத்தில் ஒரு பாடலுக்காக விஜய் கடைசியாக ஒரு கேமியோ வேடத்தில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மோஷன் போஸ்டர் இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. டி.வி.வி என்டர்டெயின்மென்ட் என்ற பேனரின் கீழ் டி.வி.வி தனய்யா இந்த படத்தை தயாரிக்கிறார், மேலும் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com