முகப்புகோலிவுட்

"May I Come In" - ரசிகர்களை மிரளவைக்க மீண்டும் வருகிறார் யாஷ் : KGF 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

  | March 14, 2020 12:40 IST
Kgf 2

துனுக்குகள்

 • ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்து வைரல் ஹிட்டான திரைப்படம் கே.ஜி.எஃப்
 • திரைக்கதை எழுதி பிரஷாந்த் நீல் இயக்கினார்
 • ரிலீஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
கடந்த 2018ம் ஆண்டு ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்து வைரல் ஹிட்டான திரைப்படம் கே.ஜி.எஃப் : சாப்டர் 1. கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்துக்குக் கதை, திரைக்கதை எழுதி பிரஷாந்த் நீல் இயக்கினார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, அனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். கன்னடத்தில் வெளியான படம் என்றபோதும் தமிழில் இந்த படத்திற்கும் நடிகர் யாஷ்சிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்த படத்தின் முதல் பாகத்தின் இறுதி கட்சியைப் பார்த்ததிலிருந்து ரசிகர்கள் இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கோலார் மற்றும் பல இடங்களில் நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அது மட்டும் இல்லாமல் யாஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நாள் தற்போது வந்துள்ளது. 
ஆம், கே.ஜி.எஃப் : சாப்டர் 2-வின் ரிலீஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் யாஷ். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 23ம் தேதி வெளியாகின்றது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com