முகப்புகோலிவுட்

ரம்யா நம்பீசன் இயக்கத்தில் 'மீ' - காணொளியை வெளியிடும் DD மற்றும் ரியோ..!

  | August 28, 2020 12:46 IST
Rio Raj

துனுக்குகள்

 • நடிகை ரம்யா நம்பீசன் திரையில் நடிகையாக மட்டுமல்லாமல் திரையின் பல
 • அதன் பிறகு ரம்யா நம்பீசன் பல இசை தொகுப்புகள் குறும்படங்கள் என்று பலவற்றை
 • இந்நிலையில் ரம்யா அவர்கள் தற்போது பத்ரி என்பவர் இயக்கத்தில் 'மீ' என்ற
நடிகை ரம்யா நம்பீசன் திரையில் நடிகையாக மட்டுமல்லாமல் திரையின் பல பக்கங்களை, எப்போதும் முயன்று பார்ப்பவர். ஒரு பக்கம் பாடகராகவும் கலக்கிவரும் அவர், சமீபத்தில் இணையத்தில் கால்பதித்து YouTube தளத்தில் தனக்கென தனி ஒரு சேனலை “Ramya Nambeesan Encore” எனும் பெயரில் ஆரம்பித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த சேனலில் தனது இயக்கத்தில் முதல் குறும்படத்தை அண்மையில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. The Hide (UN)learn எனும் அந்த குறும்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்தக்குறும்படம் சமூகத்தில் பெண்களின் வாழ்வை, பிரச்சனைகளை, அதற்கான தீர்வை பேசுகிறது. 

அதன் பிறகு ரம்யா நம்பீசன் பல இசை தொகுப்புகள் குறும்படங்கள் என்று பலவற்றை தனது இணையத்தின் வழியே வெளியிட்டு வந்தார். இது குறித்து அவர் அப்போது வெளியிட்ட அறிக்கை ஒன்றில். “Ramya Nambeesan Encore” என இணையம் வழி தொடங்கியிருக்கும் எனது இந்தப் பயணம் என் மனதுக்கு நெருக்கமானது. உலகில் உள்ள அனைவருடனும், எனது அன்பை, உணர்வை பகிர்ந்து கொள்ள எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. எனது பார்வையை, எனது உலகத்தை, புதுபுது ஐடியாக்களை, பல புதுமையான விஷயங்களை முயன்று பார்க்க மிகப்பெரும் சுதந்திதரம் இந்த Youtube தளத்தின் மூலம் எனக்கு கிடைத்திருக்கிறது." என்று கூறினார். 

இந்நிலையில் ரம்யா அவர்கள் தற்போது பத்ரி என்பவர் இயக்கத்தில் 'மீ' என்ற புதிய குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். நாளை மாலை அவரது youtube தளத்தில் இந்த குறும்படம் வெளியாகவுள்ளது. மேலும் இந்த குறும்படத்திற்கு இன்னும் வலுசேர்க்கும் வகையில் பிரபல நடிகையும் தொகுப்பாளினியுமான திவ்ய தர்ஷினி அவர்களும் பிரபல இளம் கதாநாயகன் ரியோ ராஜும் இதனை வெளியிட உள்ளனர்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com