முகப்புகோலிவுட்

சர்ச்சை நாயகி மீரா மிதுன் வெளியிட்ட நித்தியானந்தா வீடியோ..!

  | March 14, 2020 12:54 IST
Meera Mitun

நித்யானந்தாவை இறைவனின் தூதர் என்றும், அவரே கடவுள் என்றும் மீரா மிதுன் கூறுகிறார்.

மாடல் அழகியும் - நடிகையுமாக மீர மிதுன் ‘8 தோட்டாக்கள், ‘தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் போதை ஏரி புத்தி மாறி' போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் ‘உலக நாயகன்' கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்து அவர் மிகவும் பிரபலமானார்.

தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை, அரசியல் தொடர்பான கருத்துக்களையும் அடிக்கடி பதிவிட்டுத் தொடர்ந்து சர்ச்சை நாயகியாக வலம் வருகிறார். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதால் வந்துகொண்டிருந்த பட வாய்ப்புகளும் வராமல் போனதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது செம வைரலாகிவருகிறது. அதில் சாமியார் நித்தியானந்தாவின் ‘Living Enlightment' புத்தகத்தை வைத்துக்கொண்டு, “இந்த ஆச்சர்யமூட்டம் புத்தகத்தை நான் படித்துவருகிறேன், இது போன்ற புத்தகங்களை எல்லோருமே படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். உங்களுக்குத் தெரியாத பல விஷயங்களைப் பற்றிய அறிவை இந்த புத்தகம் தருகிறது” என்று கூறுகிறார்.
மேலும், நித்யானந்தாவை இறைவனின் தூதர் என்றும், அவரே கடவுள் என்றும் கூறும் மீரா இந்த புத்தகத்தைப் படிக்க எல்லோருக்கும் பரிந்துரைப்பதாகக் கூறுகிறார். இதனைப் பார்க்கும் இணையதள வாசிகள் மீரா மிதுனின் இந்த வீடியோவுக்கு எதிர்மறையான கருத்துகளை அளித்துவருகின்றனர்.

அகமதாபாத்தில் உள்ள அவரது ஆசிரமங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, நித்யானந்தா தற்போது இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார் என்பதும், அவரது பல பக்தர்கள் அவருக்கு எதிராகத் திரும்பி சமூக ஊடகங்களிலும் நேர்காணல்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும், நித்தியானந்தா ‘கைலாசா' எனும் புதிய நாட்டை அமைத்ததாகக் கூறி, வழக்கமான சொற்பொழிவுகளை யூடியூப்பில் தோன்றி வழங்கி வருகிறார். இப்போது அவருக்கு மேலும் ஒரு கோலிவுட் நடிகை சிஷ்ய பிள்ளையாகக் கிடைத்துள்ளார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com