முகப்புகோலிவுட்

த்ரிஷாவை எச்சரிக்கும் மீரா மிதுன்..!! கடுப்பான ரசிகர்கள்.!

  | July 10, 2020 18:15 IST
Meera Mitun

இந்த ட்வீட்டைப் பார்த்த த்ரிஷாவின் ரசிகர்கள் தற்போது மீராவை வெச்சு செய்துகொண்டு இருக்கிறார்கள் எனு தான் சொல்லவேண்டும்.

மாடல் அழகியும் - நடிகையுமாக மீரா மிதுன் ‘8 தோட்டாக்கள், ‘தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் போதை ஏரி புத்தி மாறி' போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் ‘உலக நாயகன்' கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் - 3' நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்து அவர் மிகவும் பிரபலமானார்.

எப்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், இன்று திடீரென நடிகை த்ரிஷாவை எச்சரித்துள்ளார்.

நடிகை த்ரிஷா இந்த பூட்டுதல் காலங்களில் இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார் மற்றும் டிக் டாக்கில் அவரது வேடிக்கையான நடன வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். சில வாரங்களுக்கு முன் அவர் (Digital Detox) சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுத்திருந்த நிலையில், நேற்று சோஷியல் மீடியாவுக்கு திரும்பினார்.

அபோது அவர், ஒரு ஹாட்டான போஸ்ட் ஒர்க்அவுட் செல்பி ஒன்றை வெளியிட்டார். அதுவும் செம வைரலாகி, இணையத்திற்கு தீயாக பரவியது. அவர் அந்த புகைப்படத்துடன் “களங்கமற்ற மனதின் நித்திய சூரிய ஒளி! #Mood மற்றும் உங்களுக்கு எப்படி?” எனப் பதிவிட்டிருந்தார்.

Eternal sunshine of the spotless mind! #mood ???? And yours ?

A post shared by Trish (@trishakrishnan) on

இந்நிலையில், இன்று மீரா மிதுன் த்ரிஷாவின் அந்த செல்ஃபியையும், தனது மாடலிங்க் புகைப்படத்தையும் பதிவிட்டு, த்ரிஷா தன்னை போலவே காப்பி அடிப்பதாகக் கூறி த்ரிஷாவை எச்சரித்துள்ளார்.

அவரது பதிவில் “இது தான் உங்களுக்கு எனது கடைசி எச்சரிக்கையாக இருக்கும் த்ரிஷா. அடுத்த முறை நான் பார்க்கும்போது, ​​முடி, மார்பிங், என்னைப் போல தோற்றமளிக்கும் என்னுடைய அம்சங்களுடன் ஃபோட்டோஷாப் செய்த உங்கள் படத்தை பதிவிட்டால், நீங்கள் கடுமையான சட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், உங்கள் மனசாட்சிக்கும் தெரியும். வளருங்கள்! உங்களுக்கென ஒரு வாழ்க்கையைப் பெறுங்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த ட்வீட்டைப் பார்த்த த்ரிஷாவின் ரசிகர்கள் தற்போது மீராவை வெச்சு செய்துகொண்டு இருக்கிறார்கள் எனு தான் சொல்லவேண்டும். அவ்வளவு கமண்ட்ஸ் வந்துகொண்டு இருக்கிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட' திரைப்படத்தில் கடைசியாக காணப்பட்ட த்ரிஷா, சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் இந்த லாக்டவுனுக்கு இடையில் இயக்கிய ‘கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படத்தில் சிம்புவுடன் இணைந்து மீண்டும் க்ளாசிக் ஹிட் ‘விண்ணைத்தாண்டி வருவாயா' பட ஜெஸ்ஸி மற்றும் கார்த்திக்கை ரசிகர்களுக்கு நினைவூட்டினர். பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி, சுகர், பொன்னியின் செல்வன், ராம் (தெலுங்கு) ஆகிய பல சுவாரஸ்யமான திரைப்படங்களை வரிசையாக கொண்டிருக்கிறார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com