முகப்புகோலிவுட்

ரஜினியும் கமலும் சினிமா துறையில் காலாவதியானவர்கள் -அமைச்சர் காட்டம்!

  | November 15, 2019 15:26 IST
Minister Udhaya Kumar

துனுக்குகள்

 • ரஜினி குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து
 • ரஜினி எழுப்பிய கேள்விகள் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது
 • அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது
ரஜினியும் கமலும் காலாவதியானவர்கள் என அமைச்சர் ஆர்.பி.உதய குமார் கூறியுள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசியபோது அவர் கூறிய காவிச்சாயம், திருவள்ளுவர், வெற்றிடம் போன்ற கருத்துக்கள் இன்னும் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக  உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், ரஜினியும், கமலும் கலைத்துறையில் 35ஆண்டுகளாக இருந்து வருவது பாராட்டத்தக்கது என்றும். ஆனால் இருவரும் சினிமா துறையில் காலாவதியாகி விட்டனர் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசியல் வெற்றிடத்தை ஏற்கனவே முதல்வர் பழனிசாமி நிரப்பிவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
 ரஜினி, அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறிய கருத்துக்கு மு.க.அழகிரி "அந்த வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்" என்று கூறியிருந்தார். தமிழக முதல்வர் க.பழனிசாமி " மக்கள் செல்வாக்கை பெற்ற சிவாஜியால் கூட அரசியலில் ஒன்றும் செய்யமுடியவில்லை. ரஜினி, கமலால் என்ன செய்ய முடியும். அவர்களால் அரசியலில் வெற்றி பெற முடியாது" என்று விமர்சித்தார். 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com