முகப்புகோலிவுட்

'Miss India', வெளியானது கீர்த்தி சுரேஷின் 20வது திரைப்படத்தின் பெயர்!

  | August 26, 2019 18:29 IST
Keerthy Suresh

துனுக்குகள்

  • 'Miss India' கீர்த்தி சுரேஷிற்கு 20வது திரைப்படம்
  • பெயர் மற்றும் டீசர் காட்சிகள் வெளியீடு
  • #MissIndia மற்றும் #Keerthy20 ஹேஸ்டேக்கள் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது
நடிகை கீர்த்தி சுரேஷின் அடுத்த திரைப்படத்துடைய பெயர் இன்று வெளியாகியுள்ளது. 'மிஸ் இந்தியா' ('Miss India') என இந்த திரைப்படம் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் பெயர் மட்டுமின்றி, அதற்கான டீசர் காட்சி ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. கீர்த்தி சுரேஷிற்கு இந்த திரைப்படம் 20வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷின் 20வது திரைப்படத்தின் பெயர் மற்றும் இந்த திரைப்படத்தின் டீசர் காட்சி இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை நரேந்திர நாத் (Narendra Nath) இயக்குகிறார். இந்த 'மிஸ் இந்தியா' திரைப்படத்திற்கு தமன் எஸ் (Thaman S) இசையமைத்திருக்கிறார். மகேஷ் எஸ் கொனேரு (Mahesh S Koneru) இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். அனைத்திற்கும் மேலாக, 'மகாநடி' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக செயல்பட்ட டானி சான்செஸ்-லோபஸ் (Dani Sanchez-Lopez) அவர்தான் இந்த திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவாளர்.
 

2018-ல் நீங்கள் இவரை 'மகாநடி'யாக பாத்திருப்பீர்கள். 2019-ல் தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் 'மிஸ் இந்தியா' என்று அந்த டீசர் காட்சிகள் அமைந்திருந்தன. இந்த பெயர் மற்றும் டீசர் வெளியானதை முன்னிட்டு #MissIndia மற்றும் #Keerthy20 ஆகிய ஹேஸ்டேக்கள் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்த ஆண்டு மிஸ் இந்தியாவாக ஒளிர வாழ்த்துக்கள் கீர்த்தி சுரேஷ்!
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்