முகப்புகோலிவுட்

'போ கொரோனா போ' - 'Throwback' புகைப்படங்களை வெளியிட்ட வரலட்சுமி

  | April 04, 2020 11:27 IST
Lockdown Against Coronavirus

துனுக்குகள்

 • தமிழில் போடா போடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்
 • இதேபோன்று ஒவ்வொரு படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தைத்
 • மேலும் அவர் Go Corona Go' என்றும் குறிப்பிட்டுள்ளார்
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், தமிழில் போடா போடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன் பிறகு, பாலா இயக்கத்தில் வெளியான தாரைத்தப்பட்டை, மற்றும் சண்டக்கோழி, சர்கார் போன்ற படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதேபோன்று ஒவ்வொரு படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சில படங்களில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் அளவிற்கு குறுகிய காலத்தில் இவர் தன்னை தயார்படுத்தி கொண்டுள்ளது இவரின் சிறப்பு. 

பலதரப்பட்ட கலவையான கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்துவரும் வரலக்ஷ்மி நடிப்பில் அண்மையில் வெளியான வெல்வட் நகரம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடிக்கடி சமூகம் சார்ந்த விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் வரலக்ஷ்மி தற்போது பரவி வரும் கொரோனா குறித்தும் பல விழிப்புணர்வு வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தனது throwback புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் 'தான் ஷூட்டிங் போவதை மிகவும் மிஸ் செய்வதாகவும், மக்கள் வீட்டில் பாதுகாப்புடன் இருக்குமாறும் கூறியுள்ளார். மேலும் அவர் Go Corona Go' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com