முகப்புகோலிவுட்

அஜித் படத்தில் நடிக்க முடியாமல் போச்சு? வருத்தத்தில் பாலிவுட் நடிகை!

  | September 25, 2019 12:00 IST
Ajith  Kumar

துனுக்குகள்

  • நேர்கொண்ட பார்வை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி வெற்றி பெற்றது
  • தற்போது மீண்டும் அஜித்-வினோத் கூட்டணி இணைந்துள்ளனர்
  • ஊர்வசி ரௌட்டிலே அஜித்துடன் நடிக்காமல் போனதற்கு வருத்தம்
கடந்த ஆண்டு பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்சி, நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘பிங்க்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதனை தமிழில் ‘நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில் ரீமேக் செய்தார் இயக்குநர் எச்.வினோத். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கனவர் போனிகபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.
 
இதில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு ஏற்றவாறும், அஜித் ரசிகர்களுக்கு ஏற்றவாறும் கதையில் சில திருத்தங்கள் செய்து அதன் மையக்கருவின் உயிரோட்டம் குறையாமல் எடுத்திருந்தார் இயக்குநர். இந்த படத்தில் அஜித்திற்கு(Ajith) ஜோடியாக வித்யா பாலன் நடித்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்க ஜோடியாக ஊர்வசி ரௌட்டிலே நடிப்பதாக இருந்ததாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
அவர் அளித்த பேட்டியில், வித்யாபாலனின் கதாபாத்திரத்தில் நடிக்க போனி கபூர் தன்னிடம் பேசியதாகவும். மற்ற படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் அந்தப் படத்துக்கு தன்னால் தேதிகள் கொடுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக நடிகர் அஜித்துடன் நடிக்க முடியாமல் போனதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார் இவர்.
 
 
 
 
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்