முகப்புகோலிவுட்

கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்; சொன்னது காங்கிரஸ் எம்எல்ஏ பிசி ஜார்ஜ்

  | February 11, 2019 18:20 IST
Thalapathy Vijay

துனுக்குகள்

 • தற்போது அட்லி படத்தில் விஜய் நடித்து வருகிறார்
 • விஜய்யின் 63வது படத்தை அட்லி இயக்குகிறார்
 • தளபதி 63படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்
கேரள மாநில காங்கிரஸ் எம் எல் ஏ.பி.சி. ஜார்ஜ் கேரளாவில் மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு  ரசிகர்கள் அதிகம் என்று கூறியுள்ளார்.

சமீப காலமாக விஜய் படங்கள் கேரளாவில் வெகுவாக கொண்டாடி வருகிறார் விஜய் ரசிகர்கள். கடந்த ஆண்டு வெளியான சர்கார் படத்தின் போது இந்திய நடிகர்களிலேயே  விஜய்க்கு 175 உயரத்தில் கட் அவுட் வைத்து கேரள ரசிகர்கள் கொண்டாடினார்கள்.  கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

கேரளாவில் அவருக்கு ரசிகர் மன்றம் திறந்து விஜய்  ரசிகர்கள் விஜய் படம் வெளிவரும்போதெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல், நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் மோகன்லால்  நடித்த ஓடியான் படத்தின் இயக்குனர் ஷிரிக்குமார் விஜய் படத்தின் வசூலை மட்டும் இங்கு கொண்டாடுகிறார்கள் என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் கேரளாவில், தனியார் தொலைக்காட்சியில் லவுட் ஸ்பீகர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹல்பி பிரான்சிஸ் என்பவர் மலையாள நடிகர்களைவிட,  தமிழ் நாட்டு நடிகர் விஜய்க்கு  இருக்கும் வரவேற்பு குறித்து  வருத்தத்துடன் பேசினார்.

இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ பிசி ஜார்ஜ் , ”மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு கேரளாவில் கூடுதலான ரசிகர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் திரையரங்குகள் முன் கூடி விஜய் கட்- டவுட்டுகளுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்கின்றனர். ” என்று தெரிவித்தார். இது தற்போது கேரளாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com