முகப்புகோலிவுட்

உலக சாதனை படைத்த 14 வயது சிறுவனை இசையமைப்பாளராக அறிவித்த பிரபலம்!

  | September 26, 2019 10:55 IST
Mohanlal

துனுக்குகள்

  • லூசிபர் வெற்றி விழாவில் இந்த அறிவிப்பு வெளியானது
  • முதல் முறையாக லிடியன் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்
  • பியானோ வாசிப்பதில் உலக சாதனைப்படைத்திருக்கிறார் லிடியன்
இந்தாண்டு தொடக்கத்தில்14வயது சிறுவன் ஒருவன் தன் பியானோ வாசிப்பின் மூலம் உலக நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்தான். உலக சாதனை அரங்கிள் வெற்றி சூடி பேசு பொருளானான் சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். இவரது தந்தை திரைப்பட இசை அமைப்பாளர்.

2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் 10 ஆம் நாள், மும்பையின் நிகழ்த்து கலைகளுக்கான தேசிய மையத்தின் டாடா அரங்கத்தில் முதன் முதலாக நிகழ்த்தப்பட்ட தேசிய பியானோ நாளன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டான் லிடியன். அன்று அவன் ஜாஸ் இசைமரபில் என்றும் பசுமையான "ஆட்டம்ன் லீவ்ஸ்" என்ற இசைக்கோர்வையை பியானோவில் வாசித்தான். அரங்கத்தில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்ந்து எழுந்து நின்று கைதட்டல் எழுப்பி தங்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினர். 

இதனை அடுத்து சிபிஎஸ் என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட திறமையாளர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு வேர்ல்டுஸ் பெஸ்ட் என்ற விருதினை வென்றார்.
சமீபத்தில் நடிகர் மோகன்லால், இயக்குநராக களமிறங்க உள்ளதாக அறிவித்திருந்தார். மேலும் 'பாரோஸ் கார்டியன் ஆப் தி காமாஸ் ட்ரெஷர்' என்கிற இந்த வரலாற்று படத்திற்கு இசையமைப்பாளராக லிடியன் நாதஸ்வரம் என்கிற 14 வயது சிறுவனை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டது.
p814bklo


இந்நிலையில் 'லூசிபர்' படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில், நடிகர் மோகன்லால் லிடியன் நாதஸ்வரம் தான் பாரோஸ்' படத்திற்கான இசையமைப்பாளர் என அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்