முகப்புகோலிவுட்

தயாரிப்பு நிறுவனத்துடன் பிரச்னை மும்பை சென்று அமிதாப் பச்சனை சந்திக்கிறார் எஸ்.ஜே.சூர்யா...!

  | May 16, 2019 17:03 IST
Monster Issue

துனுக்குகள்

  • தமிழ்வாணன் இப்படத்தை இயக்குகிறார்
  • அமிதாப் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்
  • தமிழ் இந்தி இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது
இயக்குநர் தமிழ்வாணன் இயக்கத்தில் முதல் முறையாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் படம் 'உயர்ந்த மனிதன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இந்த படத்தில் இருந்து அமிதாப் பச்சன் விலகியதாக வதந்திகள் பரவியது.
 
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
 
அமிதாப் பச்சன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே ஒரு சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. விரைவில் அது சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். மான்ஸ்டர் படத்தின் ரிலீசுக்கு பிறகு நான் மும்பை சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்பேன். நானும், இயக்குநர் தமிழ்வாணனும் இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். படப்பிடிப்பின் மூன்றாவது நாளில் அமிதாப் சார் பதிவு செய்த ட்வீட்டில் அவரது அன்பும், எங்களது உழைப்பின் மீது அவர் வைத்திருந்த மரியாதையும் தெரிந்தது. எதிர்மறை விமர்சனங்களை தவிர்க்கவும். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுள்ளார்.

 தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தை திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்