முகப்புகோலிவுட்

இதோ வந்துவிட்டார் "சாண்டா" - இன்று மாலை வெளியாகும் 'டிக்கிலோனா' ட்ரைலர்..!

  | August 21, 2020 13:10 IST
Dikkiloona

துனுக்குகள்

 • இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த
 • சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குகளும்
 • இந்நிலையில் பலரும் ஆவளோடு எதிர்பார்த்த இந்த படத்தின் ட்ரைலர்
சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே நம்மை அசரடிக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ரசிகர்களை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம், காமெடி என்று எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அசத்தும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மேலும் காமெடிக்கு வலு சேர்க்க மொட்டை ராஜேந்திரன், ஷாரா என்று ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கிறார்கள்.

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குகளும் மூன்றாக பாகங்களால் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பலரும் ஆவலோடு எதிர்பார்த்த இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளிக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com