முகப்புகோலிவுட்

நீரும் நெருப்புமாய் ஜூனியர் NTR - ராம் சரன்..! மிரட்டும் ராஜமௌலியின் RRR மோஷன் போஸ்டர்..!

  | March 25, 2020 14:16 IST
Rrr

இந்த படம் 2021 ஜனவரி 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்'. பிரபாஸின் ‘பாகுபலி' திரைப்படத்தையடுத்து ராஜமௌலி இயக்கத்தில் இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக  ‘ஆர்.ஆர்.ஆர்' அமைந்துள்ளது. இந்த படம் 2021 ஜனவரி 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம்,  மற்றும் மலையாள மொழிகளில் தயாரிக்கப்படும் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நீரும் நெருப்புமாய் பாயும் இந்த மிரட்டலான மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் கதை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் 1920-களில் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்' என்ற தலைப்பின் விரிவாக்கமாக தமிழில் இரத்தம், ரணம் மற்றும் ரௌத்திரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக பன்மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோஷன் போஸ்டரின் வெளியீட்டு தேதியை நேற்று அறிவித்தபோது, பரவும் தொற்றுநோயின் காரனமாக மன அழுத்தத்திலிருக்கும் மக்களின் மனதைத் திசைதிருப்பும் விதமாக, இந்த ஊரடங்கின் போது போஸ்டரை வெளியிடப்படுவதாக ராஜமௌலி குறிப்பிட்டுள்ளார். மேலும், ரசிகர்களை தங்கள் வீடுகளிலிருந்து பார்த்து ரசிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணுடன், அஜய் தேவ்கன், ஆலியா பாட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி, அலிசன் டூடி மற்றும் ரே ஸ்டீவன்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் டி.வி.வி தனய்யா இந்த படத்தை தயாரிக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்