முகப்புகோலிவுட்

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு MAI வேண்டுகோள்.!!

  | May 05, 2020 15:32 IST
Multiplex Association Of India

திரைப்படங்கள் திரை அரங்குகளில் வெளியாகத் தொடங்கிய பிறகு, மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வரத் தொடங்குவார்கள் என்று சங்கம் (MAI) நம்புகிறது.

தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் ஆர்.கே. செல்வமணி சமீபத்தில் திரையுலகில் ஓரளவு பணிகளை மீண்டும் தொடங்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் டப்பிங், மியூசிக் ரெக்கார்டிங் மற்றும் பிற போஸ்ட் புரொடக்‌ஷனில் பணியாற்ற அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

OTT இயங்குதளங்களில் திரைப்படத்தை வெளியிடுவதைப் பற்றி தயாரிப்பாளர்கள் திட்டமிடுவதாகப் பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோ கூட்டாளர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்களை தங்கள் படங்களை நேரடியாக OTT மேடையில் வெளியிட வேண்டாம் என்று Mutiplex Association Of India (MAI)  கேட்டுக் கொண்டுள்ளது. தற்போதைய சொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து நாடு இயல்பு நிலைக்கு வரும் வரை காத்திருக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

திரைப்படங்கள் திரை அரங்குகளில் வெளியாகத் தொடங்கிய பிறகு, மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வரத் தொடங்குவார்கள் என்று சங்கம் (MAI) நம்புகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com