முகப்புகோலிவுட்

"மீண்டும் முந்தானை முடிச்சு" - சசிக்குமாருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

  | September 19, 2020 08:17 IST
Munthanai Mudichu Movie Remake

துனுக்குகள்

 • மூத்த இயக்குநர்-நடிகர் பாக்கியராஜ் தானே எழுதி, இயக்கி கதாநாயகனாக
 • அந்த காலகட்டத்தில் ரூ. 30 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம்
 • இப்படம் வெளியாகி 37 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில் அண்மையில்
மூத்த இயக்குநர்-நடிகர் பாக்கியராஜ் தானே எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்து 1983-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முந்தானை முடிச்சு'. இதில், பாக்கியராஜுக்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருப்பார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார். மேலும் இப்படத்தை ஏ.வி.எம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது.

அந்த காலகட்டத்தில் ரூ. 30 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், 25 வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, கிட்டத்தட்ட ரூ. 4 கோடி வசூல் செய்து பிளாக் பஸ்டர் திரைப்படமாகவும், பாக்கியராஜின் எப்போதும் பேசக்கூடிய கிளாசிக் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. மேலும், இந்தப்படம் தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படம் வெளியாகி 37 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில் அண்மையில் இந்த படத்தை மீண்டும் பாக்கியராஜ் அவர்களே ரீமேக் செய்ய உள்ளதாகவும் அதில் பிரபல நடிகர் சசிக்குமார் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தை தயாரிக்கவுள்ள JSB Film Studios-ன் JSB சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில், இப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இந்த படம் உருவாவது உறுதியாகி 2021ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. JSB சதீஷ் தயாரிக்க இந்த படத்தை பாக்கியராஜ் இயக்க உள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com