முகப்புகோலிவுட்

“எனக்கு காமெடி படங்களுக்கு இசை அமைக்க ஆசை” இசை அமைப்பாளர் சாம்.சி.எஸ்

  | May 03, 2019 14:39 IST
Sam Cs

துனுக்குகள்

  • சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • சாம். சி.எஸ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • அதர்வா, ஹன்சிகா இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்
பூமராங் படத்தை தொடர்ந்து அதர்வா காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் படம் ‘100'. இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில், சாம் ஆண்டன் இயக்கத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது.
 
சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் இந்த படம் வருகிற மே 9-ந் தேதி திரைக்கு வருகிறது.
 
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய  இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்,
 
விக்ரம் வேதா, அடங்க மறு, அயோக்யா, 100, என அடுத்தடுத்து போலீஸ் படங்களாக  இசையமைத்து வருகிறேன். இவை அனைத்தும் ஒரே மாதிரியான படங்கள் போன்று தோன்றும். ஆனால் வெவ்வேறு கதைகளத்தை உடையவை இவை.
 
எனக்கு காமெடி படங்களில் இசை அமைக்க வேண்டும் என்று ஆசை சாம் எனக்கு கதை சொல்ல வந்தபோது எனக்கு ஒரு நல்ல காமெடி படம் மாட்டிகிச்சு என்று  நினைத்தேன். ஆனால் இதுவும் ஒரு போலீஸ் படம், சீரியஸ் படமாகவே இருந்தது.
 
அவர் காமெடியை விட திரில்லர் படங்களை தான் மிகச்சிறப்பாக எடுக்கிறார். என்னை சுதந்திரமாக வேலை பார்க்க விட்டது என் வேலையை ஊக்கப்படுத்தியது.
 
சண்டைக்காட்சிகளில் அதர்வா கலக்கி இருக்கிறார். இது சமூகத்தில் தற்போது நடக்கிற விஷயங்களை இப்படம்  பேசும். நிச்சயம் அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக அமையும் என்றார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்