முகப்புகோலிவுட்

‘800’க்காக விஜய் சேதுபதியுடன் 3-வது முறையாக இணையும் இசையமைப்பாளர்.!

  | July 31, 2020 12:36 IST
Sam Cs

இப்படத்தை டிஏஆர் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ராணா டகுபதி - சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.

‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன் 800-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இப்படத்திற்கு '800' தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை டிஏஆர் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ராணா டகுபதி - சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.

tlultnc

இப்போது அப்டேட் என்னவென்றால், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா, பூரியத புதிர் ஆகி படங்களுக்கு இசையமைத்திருந்த திறமையான இசையமைப்பாளர் சாம் சி.எஸ் ‘800' படத்துக்கு இசையமைக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது அடுத்த திரைப்படமான ‘மாஸ்டர்' வெளியீட்டிற்காக காத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, துக்ளக் தர்பார், கடைசி விவாசாய், யாதும் ஊரே யாவரும் கேளீர் போன்ற பல படங்களிலும் மற்றும் பிற மொழிகளில் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

fmjcj38o

அதேபோல், சாம் சி.எஸ். கைவசம் மாதவனின் 'ராக்கெட்ரி', அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம், ரெஜினா கேஸண்ட்ராவின் 'சூர்ப்பனகை', சசி குமாரின் 'ராஜவம்சம்', ஜெய் நடிக்கும் 'எண்ணித் துணிக', உதயநிதி ஸ்டாலினின் 'கண்ணை நம்பாதே', 'மோச கல்லு' தெலுங்குப் படம், ரவி தேஜாவின் பெயரிடப்படாத படம், ஹரீஷ் கல்யாண் நடிக்கும் நேரடித் தெலுங்குப் படம், புஷ்கர் காயத்ரியின் வெப் சீரிஸ் ஆகியவற்றுடன் வேறு சில படங்களும் இருக்கின்றன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com