முகப்புகோலிவுட்

'மக்கள் செல்வியின் Save Shakthi' : மனமார வாழ்த்திய தந்தைக்கு நன்றி சொன்ன மகள்..!!

  | July 26, 2020 07:42 IST
Varalakshmi Sarathkumar

துனுக்குகள்

 • திரைப்படங்கள் ஒருபுறம் இருக்க ஆரம்ப காலம்தொட்டே நடிகை வரலக்ஷ்மி
 • அவதிப்படும் மக்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்களுக்கு
 • அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்ட நிலையில் தனது மகளின்
‘மக்கள் செல்வி' என்ற இந்த பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான நடிகை தான் வரலக்ஷ்மி சரத்குமார். ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் வரலட்சுமியின் 'டேனி' என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற தகவல் அனைவரும் அறிந்ததே. அறிமுக இயக்குநர் LC சந்தானமூர்த்தி எழுதி இயக்க, வரலக்ஷ்மி சரத்குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ‘டேனி. இப்படத்தில் யோகி பாபு, வினோத் கிஷன், வேலா ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படங்கள் ஒருபுறம் இருக்க ஆரம்ப காலம்தொட்டே நடிகை வரலக்ஷ்மி சமூக பணிகளில் ஈடுபடுவதாவை தனது வழக்கமாக கொண்டுள்ளார். அது சினிமா சார்ந்த பணியாக இருந்தாலும் சரி பொதுவெளியில் உள்ள பணியாக இருந்தாலும் சரி அவர் தனது பங்களிப்பினை கொடுக்க தவறியதில்லை. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு 'Save Shakthi' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை அவர் தொடங்கினார். 

அவதிப்படும் மக்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் தன்னால் இயன்ற செயல்களை செய்து வருகிறார். குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் "Save சக்தி" மூலம் சொந்த ஊர் திரும்பும் தொழிலார்கள் பலருக்கு உதவினார். தெருக்களில் ஆதரவின்றி சுற்றித்திரியும் செல்லப்பிராணிகளுக்கும் அவர் உதவ மறக்கவில்லை. இந்நிலையில் நேற்று "Save Shakthi" நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்ட நிலையில் தனது மகளின் இந்த செயலை வியந்து பாராட்டியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com