முகப்புகோலிவுட்

'எப்படி கொரோனாவை வென்றேன்..?' - காணொளி மூலம் விளக்கும் விஷாலின் தந்தை..!

  | August 11, 2020 12:22 IST
Covid  19

துனுக்குகள்

  • இதனை சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில்
  • தொற்றில் இருந்து எப்படி தனது தந்தை மீண்டு வந்தார் என்பதை ஒரு
  • எப்போதும் தனக்கு தூணாக விளங்குவது தனது தந்தை
கொரோனா வைரஸின் பயத்தில் முழு தேசமும் பிடிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், பிரபலங்கள் பலரும் இந்த நோயினால் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மையில், நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் COVID 19க்கு நேர்மறையை பரிசோதித்தனர் என்பது அண்மையில் தெரியவந்தது. ஆனால் அவர்கள் ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்ட பிறகு தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்ற செய்தியும் வெளியானது.

இதனை சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தார். அவர் தனது பதிவில் “ஆமாம், அது உண்மைதான், என் அப்பாவுக்கு சோதனை பாசிட்டிவ் ஆனது, அவருக்கு உதவிய எனக்கும் உயர் வெப்பநிலை, குளிர், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தன மற்றும் எனது மேலாளருக்கும் அதேபோல் இருந்தது. நாங்கள் அனைவரும் ஆயுர்வேத மருத்துவத்தை எடுத்துக் கொண்டோம், ஒரு வாரத்தில் ஆபத்திலிருந்து வெளியேறினோம். நாங்கள் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறோம். இதைப் பகிர்வதில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தற்போது கோவிட் 19 தொற்றில் இருந்து எப்படி தனது தந்தை எப்படி மீண்டு வந்தார் என்பதை ஒரு காணொளி மூலம் அவர் கூறியதை தற்போது வெளியிட்டுள்ளார் நடிகர் விஷால். எப்போதும் தனக்கு தூணாக விளங்குவது தனது தந்தை என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com