முகப்புகோலிவுட்

"இது தான் First டைம்" - அசத்தலான 10 மில்லியன் வியூஸ், நன்றி சொன்ன பிரேம்ஜி..!

  | August 20, 2020 11:12 IST
Adhe Neram Adhe Idam

துனுக்குகள்

 • 2005ம் ஆண்டு வெளியான ஞாபகம் வருதே என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு
 • 2009ம் ஆண்டு பிரேம்ஜி இசையில் வெளியானது "அதே நேரம் அதே இடம்"
 • "அது ஒரு காலம்" என்ற பாடல் தற்போது இணையத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை
பிரேம் குமார் கங்கை அமரன், சுருக்கமாக இவரை அனைவரும் பிரேம்ஜி என்று அழைப்பார்கள். பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன், மற்றும் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பி ஆவர். வெங்கட் கதை இல்லாமல் கூட படம் எடுப்பர், ஆனால் தனது தம்பி இல்லாமல் படம் எடுக்கமாட்டார் என்று பலரும் கூறும் அளவிற்கு இவர்களுடைய பாசப்பிணைப்பு மிகவும் உறுதியானது. இசை குடும்பத்தில் பிறந்த பிரேம்ஜி வெளிநாட்டிற்கு சென்று ராப் இசை கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என்ற பன்முக திறமை கொண்டவர் பிரேம்ஜி. 

2005ம் ஆண்டு வெளியான ஞாபகம் வருதே என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். சாம்பி, பார்ட்டி போன்று அண்மையில் வெளியான படங்கள் இவருடைய இசையில் வெளியான படங்கள் தான். ஜே.டி. ஜெர்ரி இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சந்திரமுகி படத்தில் இளைய திலகம் பிரபு சோகத்தோடு சொன்ன 'என்ன கொடுமை சரவணன் இது' என்ற அந்த வசனத்தை இவர் படு காமெடியாக மாற்றி பேசியது இன்று வரை பலராலும் ரசிக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் 2009ம் ஆண்டு பிரேம்ஜி இசையில் வெளியானது "அதே நேரம் அதே இடம்" என்ற திரைப்படம் எம். பிரபு இயக்க இந்த படத்தில் பிரபல நடிகர் ஜெய் மற்றும் நடிகை விஜயலக்ஷ்மி நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தில் வந்த "அது ஒரு காலம்" என்ற பாடல் தற்போது இணையத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இவ்வாறு நடப்பது முதல் முறை என்றும் மக்களுக்கு இதற்காக நன்றி என்றும் பிரேம்ஜி தற்போது தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com