முகப்புகோலிவுட்

'இது சுஷாந்திற்கு சமர்ப்பணம்' - நடனம் மூலம் அஞ்சலி செலுத்திய சதீஷ்..!

  | July 31, 2020 09:05 IST
Sushanth Singh Rajput

துனுக்குகள்

 • பெயர் புகழ் என்று எல்லாம் இருந்தபோதும் அவர் தற்கொலை செய்துகொண்டது
 • சுஷாந்த் மறைந்ததில் இருந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பலர்
 • Dil bechara படத்தின் டைட்டில் ட்ராக் பாடலுக்கு நடனமமைத்து ஆடியுள்ளார்
இந்த ஆண்டு குறிப்பாக இந்த லாக் டவுன் காலத்தில் பல திரைப்பிரபலன்கள் இந்த உலகை விட்டு மறைந்தது பலரை சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் சுஷாந்த் சிங் என்ற அந்த அருமையான நடிகரின் (தற்கொலை) மரணம் அவர் ரசிகர்கள் மட்டும் இன்றி பலரை சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. பெயர் புகழ் என்று எல்லாம் இருந்தபோதும் அவர் தற்கொலை செய்துகொண்டது திரையுலகில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மரணத்திற்கு பல காரணங்கள் கூறினாலும் மாண்டவர் திரும்புவதில்லை என்பதே நிதர்சனம். 

சுஷாந்த் மறைந்ததில் இருந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பலர் பல விஷயங்களை செய்துவருகின்றனர். Dil Bechara வெளியானபோது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட பல இசைப்பிரபலன்கள் இணைய வழியில் ஒன்றிணைந்து ஒரு இசைவிருந்தினை அவருக்கு சமர்ப்பணம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பிரபல நடன அமைப்பாளரும் நடிகருமான சதீஷ் அவர்கள் சுஷாந்த்தை நினைவுகூரும் வகையில் Dil bechara படத்தின் டைட்டில் ட்ராக் பாடலுக்கு நடனமமைத்து ஆடியுள்ளார். இந்த பாடலை அவருக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com