முகப்புகோலிவுட்

"நீங்க வந்தா நாங்க வரோம்" - சூப்பர் ஸ்டாரை அரசியலில் களமிறங்க அழைக்கும் லாரன்ஸ்..!

  | September 14, 2020 10:31 IST
Cm Candidate

துனுக்குகள்

 • திரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகவா லாரன்ஸ் பலருக்கும் குறிப்பாக
 • தற்போது அவர் வெளியிட்ட ட்வீட் ஒன்றில் "முதலமைச்சர் வேட்பாளராக
 • நீங்க வந்தா நாங்க வரோம். இப்போ இல்லனா எப்போ..?" என்று தெரிவித்துள்ளார்
திரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகவா லாரன்ஸ் பலருக்கும் குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு சிறந்த முறையில் உதவி செய்து வருகின்றார். தனது படங்களில் அவர்களை மறக்காமல் பயன்படுத்தி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணர்வதில் அவர் சிறந்து விளங்குகிறார். இந்த கொரோனா சூழலில் தினமும் பல நூறு மக்களுக்கு அவர் வேண்டியனவற்றை செய்து வருகின்றார். 

ஆரம்ப நிலையில் அன்றாட உணவிற்கே சிரமப்பட்ட லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் உதவியால் குரூப் டான்சராக களமிறங்கினர். அனுதினம் தன்னுடைய கடுமையான உழைப்பால் இன்று அவர் உலகம் போற்றும் சிறந்த மனிதனாக வலம்வருகிறார் என்றால் அது மிகையல்ல. இன்றளவும், தன்னுடைய உயர்விற்கு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி என்பதை பல மேடைகளில் அவர் சொல்ல தவறுவது இல்லை. தற்போது அவர் வெளியிட்ட ட்வீட் ஒன்றில் "முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவது குறித்து நிச்சயம் தலைவர் மறுபரிசீலனை செய்யவேண்டும். எதிர்காலத்தில் வேண்டும் என்றால் அவர் வேறு யாரையாவது தேர்வு செய்யலாம், ஆனால் இப்பொது அவர் நிச்சயம் முதல்வர் வேட்பாளராக நிற்க்க வேண்டும். அவருடைய ரசிகர்களையும் இதுகுறித்து அவர் மறுபரிசீலனை செய்ய கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்க வந்தா நாங்க வரோம். இப்போ இல்லனா எப்போ..?" என்று தெரிவித்துள்ளார். 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com