முகப்புகோலிவுட்

“இவர் மட்டும் தான் என் பிரதிநிதி” ‘தல’ அஜித் வெளியிட்ட எச்சரிக்கை நோட்டீஸ்..

  | September 17, 2020 17:56 IST
Thala Ajith

‘தல’ அஜித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மாஸ் ஹீரோக்களில் ஒருவர்.

‘தல' அஜித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மாஸ் ஹீரோக்களில் ஒருவர். கோடிக்கணக்கன ரசிகர்களுடன் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்.

கடைசியாக ‘நேர்கோண்ட பார்வை' படத்தில் காணப்பட்ட அவர், தற்போது ‘வலிமை' திரைப்படத்தில் நடித்துவருகிறார். போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கும் இப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மீதம் இருப்பவை மிக விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு இடையில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடிபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்போது ‘தல' அஜித் தனது அதிகாரப்பூர்வ சட்ட ஆலோசகர் மூலம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், பல ஆண்டு காலமாக பணியாற்றிவரும் தன்னுடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா மட்டும் தான் தனது பிரதிநிதி என்றும் தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி வேறு யாராது அனுகினால், அவரிடம் தெரிவிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com