முகப்புகோலிவுட்

'அட இதான் ரெயின்போ கேக் ஆ..' - Quarantine Baking செய்து அசத்தும் சாயிஷா

  | May 03, 2020 15:03 IST
Sayyesha Arya

துனுக்குகள்

  • ஜெயம் ரவியின் ‘வனமகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்
  • இந்நிலையில் தற்போது நிலவி வரும் ஊரடங்கு காரணமாக
  • பல வகை உணவுகளை செய்து அசத்தி வந்த சாயிஷா தற்போது
ஜெயம் ரவியின் ‘வனமகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பிரபல பாலிவுட் நடிகர் சுமீத் சைகலின் மகளான அவர், கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகர் ஆர்யாவுடன் காதல் கொண்டு, கடந்த ஆண்டு இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அதையடுத்து, சூர்யாவுடன் ‘காப்பான்' திரைப்படத்தில் நடித்த சாயிஷா, தற்போது ஆர்யாவுடன் ‘டெடி' திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நிலவி வரும் ஊரடங்கு காரணமாக நடிகர் நடிகைகள் தங்களது வீட்டில் குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். நடிகர்கள் பலர் உடற்பயிற்சி, ஓவியம், சமயல், இசையமைப்பு என்று தங்களுடைய நேரத்தை சிறப்பாக செலவிட்டு வருகின்றனர். தற்போது நடிகை சாயிஷா வீட்டில் வித விதமான உணவுகளை சமைத்து அவரது கணவர் ஆர்யாவிற்கு வழங்கி வருகிறார். 

பல வகை உணவுகளை செய்து அசத்தி வந்த சாயிஷா தற்போது ரெயின்போ கேக் செய்து அசத்தியுள்ளார். அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com