முகப்புகோலிவுட்

'யாருங்க அந்த யோகேஷ்..?' - வீடியோ போட்டு அசத்தும் சூப்பர் மாடல் மீரா

  | April 06, 2020 11:39 IST
Meera Mitun

துனுக்குகள்

 • மாடல் அழகியும் - நடிகையுமாக மீர மிதுன் ‘8 தோட்டாக்கள்,
 • ‘உலக நாயகன்' கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் - 3'
 • மேலும் இது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்
மாடல் அழகியும் - நடிகையுமாக மீர மிதுன் ‘8 தோட்டாக்கள், ‘தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் போதை ஏரி புத்தி மாறி' போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் ‘உலக நாயகன்' கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் - 3' நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்து அவர் மிகவும் பிரபலமானார். தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை, அரசியல் தொடர்பான கருத்துக்களையும் அடிக்கடி பதிவிட்டுத் தொடர்ந்து சர்ச்சை நாயகியாக வலம் வருகிறார்.

அண்மையில் ‘மாஸ்டர்' திரைப்படத்தின் 2-வது போஸ்டரில் விஜயின் போஸ் போலவே போஸ் கொடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “யார் யாரைக் காப்பி செய்தது.. இது டிசம்பர் 2019-ல் எடுக்கப்பட்ட எனது கிங்பிஷ்ஷர் ரேம்ப் ஷோ புகைப்படம். எனவே இதற்குப் பதில் தெரிந்துவிட்டது” என்று பதிவிட்டார். இதைப்போல அடிக்கடி சர்ச்சைக்கு ஆளாகும் சூப்பர் மாடல் மீரா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

"My Quarantine With You @yogeshvijayan90", என்ற தலைப்புடன் உள்ள அந்த வீடியோவில் அவர் ஒருவருடன் தனிமையில் நடமாடிக் கொண்டிருக்கிறார், மேலும் இது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக வெளியிட்ட பதிவில் "தான் காதலில் விழுந்து கொண்டிருப்பதாகவும்" தெரிவித்துள்ளார் மீரா.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com