முகப்புகோலிவுட்

‘சைக்கொ’ திரைப்படத்தின் செம அப்டேட்..!

  | January 18, 2020 12:42 IST
Psycho

துனுக்குகள்

  • சைக்கோ திரைப்படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார்.
  • இப்படத்தை ‘டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.
  • இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
‘சைக்கோ' திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை முன்னனி தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சைக்க'. இதில் உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும், முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர் ராம் நடிக்கிறாராம்.

இப்படத்தை ‘டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. ‘இசைஞானி' இளையராஜா இசையமைக்கும் இப்படத்தற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்திலிருந்து இளையராஜா இசையில் சித் ஸ்ரீராம் குரலில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இம்மாதம் 24-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் அதிகாரப்பூரவ ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் வனிக ரீதியான அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் சாட்டிலைட்உரிமையை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி பெற்றுள்ளது. ஸ்டார் விஜய் ஏற்கெனவே மிஷ்கின் இயக்கிய துப்பரிவாளன், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்