முகப்புகோலிவுட்

“ஏய் கடவுளே..!!” மிரட்டும் சைக்கோ ஸ்னீக் பீக்..!

  | January 23, 2020 09:36 IST
Psycho

துனுக்குகள்

 • சைக்கோ திரைப்படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார்.
 • இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
 • இப்படத்தை டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.
மிஷ்கினின் சைக்கோ திரைப்படத்தின் Moviebuff Sneak Peek வெளியாகி வைரலாகிவருகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்றவராக நடிக்கும் திரைப்படம் ‘சைக்கோ'. இதில் உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர் ராம் நடித்துள்ளார்.

இப்படத்தை ‘டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. ‘இசைஞானி' இளையராஜா இசையமைக்கும் இப்படத்தற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திலிருந்து இளையராஜா இசையில் சித் ஸ்ரீராம் குரலில் வெளியான ‘உன்ன நெனச்சு நெனச்சு' மற்றும் ‘நீங்க முடியுமா'மற்றும் கைலாஷ் ஐயர் பாடிய ‘தாய் மடியில்' ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், ‘உன்ன நெனச்சு நெனச்சு' பாடல் ப்ரோமோ வீடியோ வெளியானது.

அதையடுத்து நேற்று இப்படத்திலிருந்து சுவாரஸ்யமான காட்சி ஸ்னீக் பீக்காக வெளியாகி தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. நாளை உலகெங்கும் வெளியாகவுள்ள இப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் ஏகபோகமாக அதிகரித்துள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com