முகப்புகோலிவுட்

அருண் விஜயுடன் சூப்பர்ஹிட் தொடர்ச்சிக்கு தயாராகும் மிஷ்கின்.!!

  | May 19, 2020 16:16 IST
Myshkin

2008 சூப்பர்ஹிட் ‘அஞ்சாதே’ திரைப்படத்தில் நரேன், பிரசன்னா, அஜ்மல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

‘சைக்கோ' பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின், துப்பறிவாளன் 2 படத்தினை இயக்கிவந்தார். அப்படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான விஷாலுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிலிருந்து வெளியேறினார்.

அதையடுத்து, சிம்புவிடம் ஒரு கதையைக் கூறியதாகவும், அந்த கதைக்களத்தில் ஈர்க்கப்பட்டு, மிஷ்கினுடன் இப்படத்தில் பணியாற்ற விருப்பப்படுவதாகவும் தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. சிம்புவும் ‘மாநாடு' திரைப்பட படப்பிடிப்பை முடித்த கையோடு மிஷ்கின் படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், மிஷ்கின் அடுத்ததாக அஜித்தின் ‘என்னை அறிந்தால்' படத்தின் மூலம் மிகப்பெரிய கம் பேக் கொடுத்து, தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களைக் கொடுத்துவரும் நடிகர் அருண் விஜயுடன் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மிஷ்கின் இயக்கவிருக்கும் அருண் விஜய்யின் இந்த படம் அவரது 2008 சூப்பர்ஹிட் ‘அஞ்சாதே'வின் தொடர்ச்சியாக இருக்கும் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. கிரைம் த்ரில்லரான ‘அஞ்சாதே' திரைப்படத்தில் நரேன், பிரசன்னா, அஜ்மல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும், பிரசன்னா மற்றும் அருண் விஜய் ஏற்கனவே மாஃபியாவில் எதிராளிகளாக நடித்துள்ளனர், என்பதால் அஞ்சாதே 2 படத்திற்காக ஒரு புதிய வில்லனை ஒப்பந்தம் செய்ய மிஷ்கின் தேடுவதாக கூறப்படுகிறது.

அருண் விஜய் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கிய ‘மாஃபியா: சாப்டர் 1' திரைப்படத்தில், ‘ஆர்யன்/டெக்ஸ்டர்' என இரட்டை வேடங்களில் மிரட்டலான நடிப்பில் அசத்தியிருந்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com