முகப்புகோலிவுட்

மிஷ்கினின் அடுத்த படம்- ஜி.வி. பிரகாஷுடன் கூட்டணி..?

  | September 18, 2020 15:41 IST
Mysskin

மிஷ்கின் கடைசியாக தியாகராஜா குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், போன்ற உன்னதமான திரைப்படங்கள் மூலமாக மாறுபட்ட யதார்த்த நிலை இயக்குநராக அறியப்பட்டவர்.

இயக்குநர் மிஷ்கின் கடைசியாக உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் மற்றும் ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் நடித்த ‘சைக்கோ' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பைப் பெற்று நல்ல வருமானமும் ஈட்டியது. அதையடுத்து சமீபத்தில் விஷால் நடிக்கும் அதிரடி திரில்லர் ‘துப்பரிவாளன்-2' திரைப்படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு, அருண் விஜய் நடிப்பில் ஒரு போலீஸ் கதையும், அதைத் தொடர்ந்து சிம்பு மற்றும் வடிவேலு கூட்டணியில் மற்றொரு படத்தையும் இயக்கவுள்ளதாக தகவல்கள் உள்ளன. இதில் ஏதேனும் ஒரு படமாவது உறுதிசெய்யப்பட்டு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது இயக்குநர் மிஷ்கின் ஒரு படத்தில்  நடிக்கத் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் மாடல் திவ்ய பாரதி இணைந்து நடிக்கும், அறிமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் ‘பேச்சலர்' திரைப்படத்தில் மிஷ்கின் ஒரு கேமியோவாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக்சஸ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மிஷ்கின் கடைசியாக தியாகராஜா குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஒரு அசத்தலான கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com