முகப்புகோலிவுட்

இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படம்; இமான் இசையில் வெளியானது பாடல்கள்.!

  | May 21, 2020 13:40 IST
Lingusamy

இந்த புதிய படத்தில் ஹீரோவாக லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸின் மகன் வினோத் நடிக்கிறார்.

இயக்குநர் என். லிங்குசாமி கமர்சியல் பொழுதுபோக்குக்கு திரைபடங்களை இயக்குவதில் பெயர்பெற்றவர். அவர் ரன், ஆனந்தம், சண்ட கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான் மற்றும் சண்ட கோழி 2 ஆகிய படங்களுடன் பார்வையாளர்களை கவர்ந்தார்.

இயக்கியதைத் தவிர, திருப்பதி பிரதர்ஸ் என்ற பேனரின் கீழ் சதுரங்க வேட்டை, மஞ்ச பை, வழக்கு எண் 18/9, கும்கி உள்ளிட்ட பல படங்களையும் தயாரித்துள்ளார்.

தற்போது, லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் பேனரின் கீழ் அடுத்த திட்டமாக 'நான் தான் சிவா' திரைப்படத்தை வழங்குகிறார். இப்படத்தை, ஆர்.பன்னீர்செல்வம் இயக்கியுள்ளார், இவர் ‘ரேனிகுண்டா' மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'கருப்பன்' படத்தையும் இயக்கியுள்ளார்.

'நான் தான் சிவா' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த புதிய படத்தில் ஹீரோவாக லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸின் மகன் வினோத்தும், கதாநாயகியாக அஷ்ரதா ஷெட்டியும் நடிக்கின்றனர். மேலும் ராஜசேகர் கேமராவையும், ஆண்டனி எடிட்டிங் வேலைகளையும் கையாளுகின்றனர்.

டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. மேலும், இயல்புநிலை திரும்பும்போது இந்த ஆண்டு இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com