முகப்புகோலிவுட்

"என் தந்தையின் வரிகள் முத்து" - தந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்..!!

  | July 13, 2020 08:30 IST
Na. Muthukumar

துனுக்குகள்

 • மாரடைப்பு காரணமாக 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம்
 • அவரின் மகன் ஆதவன் தனது தந்தைக்கு எழுதிய கவிதை
 • அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்
நா. முத்துக்குமார், தமிழ் சினிமா இழந்துவிட்ட ஒரு நிகரற்ற எழுத்தாளர் அவர். காஞ்சிபுரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த முத்துக்குமார் சிறு வயதில் தாயை இழந்தவர். எழுத்தின் மீது கொண்ட காதலால் பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான திரு. பாலுமகேந்திரா அவர்களிடம் உதவியாளராக பணியாற்றினார். சத்யராஜ் அவர்களின் நடிப்பில் வெளியான மலபார் போலீஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் ஒரு பாடலாசிரியராக அறிமுகமானார். 

உன் பேர் சொல்ல ஆசை தான், எங்கள் வீட்டில் எல்லா நாலும் கார்த்திகை தொடங்கி எந்திரன் 2.0 படத்தில் ரம்யமாய் ஒலித்த புல்லினங்காள் என்ற பாடல் வரை 200கும் அதிகமான பாடல்களை அவர் எழுதியுள்ளார். 2013ம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் திரைப்படத்தில் வெளியான "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" என்ற பாடலின் மூலம் இவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.     

2014ம் ஆண்டு சைவம் என்ற படத்தின் வந்த "அழகே, அழகே" என்ற பாடலுக்கும் இவர் தேசிய விருது பெற்றார். மஞ்சள் காமாலை நோயினால் பல நாட்கள் அவதிப்பட்டு வந்த முத்துக்குமார் மாரடைப்பு காரணமாக 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி நேற்று அவரின் மகன் ஆதவன் தனது தந்தைக்கு எழுதிய கவிதை பின்வருமாறு...
என் தந்தை.
என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்,
அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்.
என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்,
அவர் எங்கள் காட்டில் சிங்கம்.
என் தந்தையின் வரிகள்  முத்து,
அவர்தான் எங்களின் சொத்து.
என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்,
அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்.
என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா,
எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா.
எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா,
இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா.

-மழலை கவிஞர் ஆதவன் முத்துக்குமார்...

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com