முகப்புகோலிவுட்

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

  | January 24, 2020 15:44 IST
Nadigar Sangam Election

துனுக்குகள்

  • நடிகர் சங்கத் தேர்தல் 2019 ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்றது.
  • அது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
  • இந்த வழக்கை நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார்.
கடந்த ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 23-ஆம் தேதி சென்னை தனியார் பள்ளியில் நடைபெற்றது. தேர்தல் நடிபெறுவதற்கு முன்பாகவே, தமிழக் அரசு அந்த தேர்தல் நடைமுறை செல்லாது எனக் கூறி தேர்தல் நடைபெற தடை விதித்தது. பின்பு, தமிழக அரசின் அந்த தடையை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதையடுத்து, அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலை நடத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கி, வாக்குகளின் எண்ணிக்கையை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் நடைபெற்று, வாக்குப் பெட்டிகள் தனியார் வாக்கு வங்கியில் வைக்கப்பட்டது.
அந்த வழக்கில் தற்போது, இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டடுள்ளது. அதாவது, நடிகர் சங்க நிர்வாகிகள், அவர்கள் பதிவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் தொடர்பாக எடுத்த எந்த முடிவும் செல்லாது, அதன்படி இந்த தேர்தலும் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய வாக்காளர் பட்டியலை தயாரித்து, 3 மாதங்களுக்குள் மீண்டும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையில் நடத்தவேண்டும் என வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்