முகப்புகோலிவுட்

நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம்! மீண்டும் வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம்!

  | November 02, 2019 14:19 IST
Nadigar Sangam

துனுக்குகள்

  • கடந்த ஜுன்மாதம் தேர்தல் நடைபெற்றது
  • வழக்கு காரணமாக வாக்கு எண்ணப்படாமல் இருக்கிறது
  • நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கு தள்ளி வைக்கப்பட்டது
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022-ம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களித்தனர். தேர்தல் முவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்டதால் வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது.
 
 வாக்கு எண்ணிக்கை குறித்து நடிகர் சங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்குகள் நேற்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பு வழக்கறிஞர் ‘நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடியும் முன்பே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய முடியாது சங்க விதிகளின்படி உறுப்பினர்களை நீக்கவும், மாற்றவும் செயற்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார். இது தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 6-ந்தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்