முகப்புகோலிவுட்

ரஜினிகாந்த் பா.ஜ.க வின் மாநில தலைவரானால் வரவேற்பேன்!! பிரபல நடிகை நளினி!!!

  | September 09, 2019 14:50 IST
Nalini

துனுக்குகள்

  • ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்
  • தர்பார் படத்தில் தற்போது நடித்து வருகிறார்
  • ரஜினி கட்சி தொடங்கினால் அதை வரவேற்பேன் என்று நளினி கூறியுள்ளார்
நடிகர் ரஜினிகாந்த் தனி கட்சி தொடங்கினாலும் சரி பா.ஜ.க-வின் தமிழ்நாடு தலைவரானாலும் சரி அதை வரவேற்கிறேன் என்று பிரபல நடிகை நளினி கூறியுள்ளார்.
 
தமிழ் திரையுலகில் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்து புகழ் பெற்றவர் மூத்த நடிகை நளினி. இவர் காமெடி நடிகையாகவும், வில்லி கதாபாத்திலும் நடித்து கவனம் ஈர்த்தவர். தற்போதுவரை பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இது தவிற டி.வி. சீரியல்களிலும் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நாவலூர் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகை நளினி கலந்து கொண்டார்.
 
நிகழ்ச்சி முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்,
தமிழ்சினிமா வலுவான கதைகளங்களைக் கொண்டு வளர்ச்சி பெற்று வருகிறது. புதிய புதிய இயக்குநர்கள் நல்ல கதைகளை மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள். வன்முறை காட்சிகளை தவிர்த்து சமூக சீர்திருத்தம், சமூக விழிப்புணர்வு காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும். திரைப்படங்களைப் போல் சீரியல்களுக்கு தணிக்கை சான்று வழங்கினால் நன்றாக இருக்கும்.  என்றால் மேலும் பேசிய அவர் நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எவ்வித தவறும் இல்லை, ரஜினிகாந்த் தனிக்கட்சித் தொடங்கினாலும் சரி அல்லது பா.ஜ.க வின் மாநில தலைவராக பொறுப்பேற்றாலும் சரி அதை நான் வரவேற்பேன்' என்று தடாலடியாக கூறினார்.
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்