முகப்புகோலிவுட்

ரசிகர்கள் கொண்டாடும் சிவகாத்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ டிரெய்லர்!

  | September 14, 2019 18:32 IST
Nvp

துனுக்குகள்

 • இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது
 • இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
 • யோகி பாபு, சூரி முதல் முறையாக இப்படத்தில் இணைந்துள்ளனர்
‘பசங்க' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் இயக்குநர் பாண்டிராஜ். “ஒரு பானை சோற்று ஒரு சோறு பதம்” என்கிற பழமொழிக்கேற்ப தன் முதல் படைப்பிலே ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் இவர். சிறியவர்கள் முதல பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடும் படமா பசங்க படம் அமைந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்த குடும்பங்கள் கொண்டாடும் திரைக்கதைகளை திரைக்கு கொண்டு வந்து அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றார் பாண்டிராஜ்.
 

 
இவர் இயக்கத்தில் வெளியான ‘வன்மசம்', ‘ ‘மெரினா', ‘கேடி பில்லா கிள்ளாடி ரங்கா', ‘ பசங்க2', ‘ கடைகுட்டி சிங்கம்'  உள்ளிட்ட படங்களை மக்கள் குடும்பம் குடும்பமாக கண்டு களித்து பேராதர கொடுத்தனர். ஜனரஞ்சகமான குடும்பப்படங்களை கொடுத்து வரும் பாண்டிராஜ் தனது அடுத்த படைப்பையும் குடும்பங்கள் ரசித்து கொண்டாடும் வகையில் படைத்திருக்கிறார். ஏற்கனவே இவரது இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்த சிவகார்த்திகேயன். தற்போது இவர் இயக்கும் நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நாயகனாக நடித்துள்ளார்.
 
சன்பிக்சர்ஸ் சிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இயக்கநர் இமயம் பாரதிராஜா, சமுத்திரகனி, நட்டி நட்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல்,சூரி யோகி பாபு, உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே இந்த குடும்பத்தில் இணைந்துள்ளனர். மண்வாசம் மாறாத குடும்ப உறுவுகளின் முக்கியத்துவத்தை பற்றி பேசும் திரைப்படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. டி. இமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஐஷ்வர்யாவின் அண்ணனாக சிவகார்த்திகேயன் நடிக்க இவர்களின் உரவை வலுவாக பேசும் காட்சிகள் இந்த டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. மேலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்து அசத்தியிருக்கிறார்.
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com