முகப்புகோலிவுட்

போலீஸாக மிரட்டும் நந்திதா.! வெளியானது ‘IPC 376’ ட்ரைலர்.!

  | July 02, 2020 18:49 IST
Nanditha Swetha

தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும், தெலுங்கில் இசையமைப்பாளர் தமனும் வெளியிட்டுள்ளனர்.

2008ம் ஆண்டு வெளியான 'நந்தா லவ்ஸ் நந்திதா' என்று கன்னட படத்தில் நடித்ததன் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார் நந்திதா ஸ்வேதா. அறிமுகம் கன்னட திரைப்படம் என்றாலும் அதற்குப் பின் அதிக அளவில் தமிழ்ப் படங்களில் தான் நடித்துள்ளார். 2012ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார். அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமபார். குறிப்பாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? படத்தில் இவர் ஏற்று நடித்த குமுதா கதாபாத்திரம் இன்று வரை பேசப்பட்டுவருகிறது.

இந்நிலையில் இப்போது இவர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் படம் தான் IPC 376. ஆக்‌ஷன் ஹாரர் கலந்த கமர்சியல் படமாக இது உருவாகிவருகிறது. இந்த படத்தில் வரும் பல ஆக்ஷன் காட்சிகளில் நந்திதா டூப் இல்லாமல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ராம்குமார் சுப்பாராமன் இயக்கியுள்ள இந்த படம் பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறித்த படம் என்று கூறப்படுகிறது, படத்தின் தலைப்பும் அதற்கு ஏற்றார் போல அமைந்துள்ளது.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதனை தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும், தெலுங்கில் இசையமைப்பாளர் தமனும் வெளியிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com