முகப்புகோலிவுட்

அமைச்சர்தான் அரைவேக்காடு; சூர்யவிற்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத்தின் சிறப்பு பேட்டி!

  | July 16, 2019 13:35 IST
Suriya

துனுக்குகள்

  • அரசியல் தளத்தில் நீண்ட காலம் பயணித்தவர் நாஞ்சில் சம்பத்
  • கருத்துரிமைக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறவர் இவர்
  • சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவி தெரிவித்திருக்கிறார் இவர்
அகரம் அரக்கட்டளை சார்பாக கடந்த வாரம், 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களக்கு 40ம் ஆண்டு பரிசு வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் சூர்யா,
 
‘இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மாணிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மாணிக்கப்போகும் புதிய கல்வி கொள்கைப்பற்றி யாரும் வாய் திறக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
 
தரமான, சமமான கல்வியை கொடுக்காமல் நுழைவு தேர்வு போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் தகுதியான மாணவர்களை எவ்வாறு உருவாக்க முடியும்” என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு கிராமபுர அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மிகக்குறைவாக இருக்கிறார்கள். பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் இல்லை என கேள்விகளை அடுக்கி இருந்தார். இந்த கேள்விகள் அரசியல் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்த விமர்சனங்களுக்கு அதிமுக, மற்றும் பா.ஜ.க தரப்பினர் எதர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் சூர்யாவின் இந்த கேள்விகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை சௌந்தர் ராஜன்  ‘புதியக் கல்விக்கொள்கை பற்றி என்னவென்றே தெரியாமல் விமர்சனம் செய்கிறார்கள் என்றிருந்தார்” அதிமுகவை சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரு படி மேலே சென்று சூர்யா ஒரு அரைவேக்காடு, சூர்யாவிற்கு கல்விக்கொள்கைப்பற்றி என்ன தெரியும் என்று கூறியிருந்தார்.
 
இந்த சம்பவம் குறித்து முன்னால் அரசியல் பேச்சாளரும், தற்போதைய நடிகருமான நாஞ்சில் சம்பத்திடம் தொடர்பு கொண்டு பேசினேன்,
 
“கருத்துரிமைக்கு கல்லரையிடுவதற்கு சில பாசிஸ்ட்டுகள் நினைக்கிறார்கள்.  நினைத்ததை நடைமுறைப் படுத்துவதற்கு வாய்பிளந்திருக்கின்ற ஓநாய் போல் காத்து கிடக்கிறார்கள். நடிகர் சூர்யா கருத்து சொன்னது ஒரு நடிகர் என்கிற நிலையில் இல்லை. அகரம் என்கிற அரக்கட்டளை தொடங்கி காலத்தால் கைவிடப்பட்டவர்களுக்கு கல்விகொடுக்கின்ற அந்த கருணை உள்ளம்,  அந்த விழாவில் பேசும் போது இன்றைக்கு இந்தியாவின் சமூக நீதிக்கு வேட்டு வைக்கக்கூடிய கல்விக்கொள்கையின் மீது ஒரு நியாயமான விமர்சனத்தைதான் அவர் வைத்தார். இன்னும் சொல்லப்போனால் அவர் கூர்மையான விமர்சனத்தை வைக்கவில்லை. கோடிட்டு காட்டியதற்கே இவர்கள் கொதித்தெழுகிறார்கள் என்றால் புதிய கல்விக்கொள்கை ஏழை மக்களை, பின்தங்கிய மக்களை எப்படியெல்லாம் பாதிக்கும் என்று அவர் பட்டியலிட்டால் இன்றைக்கு குரைக்கின்ற இந்த கூட்டம் நாளைக்கு என்ன செய்வார்கள் என்பதுதான் எனக்குள் இருக்கும் கேள்வி. 
 
ஆகவே மத்திய அரசு ஒன்றை நடைமுறைப்படுத்தினால் அதை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்கிற சர்வதிகாரம்  இந்தியாவில் சத்தமில்லாமல் அமுலாகி வருகிறது. அதை எதிர்க்க துணிந்துவிட்டவர்களின் வரிசையில் சூர்யாவிற்கு ஒரு இடம் கிடைத்திருக்கிறது. ஆகவே நான் சூர்யாவை வாழ்த்துகிறேன்” என்றார்.
 
சினிமா துறை சார்ந்து சூர்யாவிற்கு எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு
“அப்படி ஒரு எதிர்பார்ப்பு சூர்யாவிற்கு இருப்பதாக நான் கருதவில்லை. யாரெல்லாம் நமக்கு பக்கத்துணையாக இருக்கிறார்கள் என்று கணக்கு போடுகிற நிலையில் சூர்யாவும் இல்லை.  ஆனால் இந்த என்ன ஓட்டம் உள்ளவர்கள் திரையுலகில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களும் தொடர்ச்சியாக இந்த கருத்துகளை போசிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் மக்களை நேரடியாக பாதிக்கின்ற விஷயம் இது. கலையும், இலக்கியமும் மக்களுக்கானது ஆகவே கலையுலகத்தில் இருக்கிறவரும் இந்த சமூகத்தினுடைய அவலத்தை வெளிப்படுத்துவதற்கான பொறுப்புணர்ச்சி இருக்கிறது. அந்த பொறுப்புணர்ச்சியில்தான் சூர்யா இதனை வெளிப்படுத்தியிருக்கிறார்.
 
அமைச்சர் கடம்பூர் ராஜு சூர்யாவை அரைவேக்காடு என்று விமர்சனம் செய்திருக்கிறார் அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றதற்கு,
 
“ பொறியியல் பட்டம் பெற்றவன் சூர்யா, உலக நாடுகளில் உலா வந்தவன் சூர்யா, தம்பி சிவக்குமாரின் தளத்தில் தொடர்ந்து வாசிப்பவன் சூர்யா, ஆனால் அவரை அரைவேக்காட்டுத்தனம் என்று விமர்சித்தவர்தான் அரைவேக்காடு என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
 
ஒரே இந்தியா, ஒரே கல்வி, ஒரே பன்பாடு, ஒரே மொழி என்ற முடிவு எடுத்திருப்பவர்கள் எதிர்வினை ஆற்றுகிறவர்கள் மீது இப்படி கோபம் கொள்வது இயல்பானதுதான்.
 
சூர்யாவை கேள்வி கேட்க்கவும், விமர்சிப்பதற்கான எல்லா உரிமையும் எல்லோருக்கும் உண்டு. சமகாலத்தில் சமூகவலைதளங்களில் எதை எடுத்தாலும் விமர்சிப்பது, எப்படி வேண்டுமானாலும் விமர்சிப்பதை சகித்துக்கொள்ள முடியவில்லை” என்றார்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்