முகப்புகோலிவுட்

'நந்திதாவின் ஆக்ஷனில் உருவான IPC 376' - விரைவில் வெளியாகும் ட்ரைலர்..!!

  | June 29, 2020 15:02 IST
Ipc 376 Movie

துனுக்குகள்

 • இந்நிலையில் இப்போது இவர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் படம்
 • தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் உருவாகி உள்ள இந்த
 • ஜூலை மாதம் 2ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக
2008ம் ஆண்டு வெளியான 'நந்தா லவ்ஸ் நந்திதா' என்று கன்னட படத்தில் நடித்ததன் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார் நந்திதா ஸ்வேதா. அறிமுகம் கன்னட திரைப்படம் என்றாலும் அதற்குப் பின் அதிக அளவில் தமிழ்ப் படங்களில் தான் நடித்துள்ளார். 2012ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார். அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமபார். குறிப்பாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? படத்தில் இவர் ஏற்று நடித்த குமுதா கதாபாத்திரம் இன்று வரை பேசப்பட்டுவருகிறது. 

இந்நிலையில் இப்போது இவர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் படம் தான் IPC 376. ஆக்‌ஷன் ஹாரர் கலந்த கமர்சியல் படமாக இது உருவாகிவருகிறது. இந்த படத்தில் வரும் பல ஆக்ஷன் காட்சிகளில் நந்திதா டூப் இல்லாமல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலங்களில் பெண்களை முன்னிலைப்படுத்தும் வகையில் படங்கள் அதிகம் வெளிவரும் நிலையில் இந்த படமும் பெண்களை முன்னிலைப்படுத்தும் ஒரு படமாகத் தான் அமைத்துள்ளது. இயக்குநர் ராம்குமார் சுப்பாராமன் இயக்கியுள்ள இந்த படம் பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறித்த படம் என்று கூறப்படுகிறது, படத்தின் தலைப்பும் அதற்கு ஏற்றார் போல அமைந்துள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வரும் ஜூலை மாதம் 2ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 26, தேதி இந்த படத்தின் ப்ரீ-டீஸர் வெளியானது குறிப்பிடத்தக்கது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com