முகப்புகோலிவுட்

தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷின் 24வது படம் “பெண்குயின்” !

  | October 17, 2019 14:17 IST
Keerthi Suresh

துனுக்குகள்

 • கீர்த்தி சுரேஷின் 24வது படம் இது
 • இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கிறது
 • இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார் இவர்
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 24வது படத்தின் தலைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
 
தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான ‘இது என்ன மாயம்' படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.  மலையாள படங்களில் பிசியாக நடித்து வந்தத இவருக்கு தமிழ் திரையுலம் சிறந்த வரவேற்பை கொடுத்தது. தனது இரண்டாவது படமான சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் உள்ளிட்டவர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை பதித்தார்.
 
பின் நடிகையர் திலகம் சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சரோஜா தேவி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் தென்இந்திய திரையுலகில் தனிமுத்திரைப்பதித்தார். தெலுங்கில் இப்படம் மகாநதி என்கிற பெயரில் வெளியாகி மாபெறும் வெற்றி பெற்றது. இப்படத்திற்காக மத்திய அரசு இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வழங்கியது.
 
இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகமாகி இருக்கிறது. தெலுங்கில் இரண்டு படங்கள், இந்தியில் ஒரும் படம் மலையாளத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார். இந்நிலையில் தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷின் 24வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. “பெண்குயின்” என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com