முகப்புகோலிவுட்

தேசிய விருது பட்டியலில் புறக்கணிக்கப்படும் தமிழ் படங்கள்! தொடர்ந்து வெடிக்கும் சர்ச்சை!

  | August 14, 2019 19:43 IST
National Awards

துனுக்குகள்

 • கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது
 • தமிழ் படங்களில் 'பாரம்' படம் தேசிய விருது பெற்றுள்ளது
 • தமிழ் படங்கள் தேசிய விருதில் புறக்கணிப்பட்டுள்ளதாக பிரபலங்கள் கருத்து
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு வெளியான சிந்த படங்களுக்கு இந்திய அரசு தேசிய விருது வழங்கும் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இதில் ‘பாரம்' என்கிற தமிழ் படத்தை தவிற வேறு எந்த படமும் இடம் பெறவில்லை.
 
கடந்த ஆண்டு சிறந்த படங்கள் பல தமிழில் வெளியாகி இருந்த போதிலிலும் ஒரு படம் கூட பட்டியலில் இடம் பெறாதது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஏற்கனவே தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் சதீஷ் குமார்,
  
“தேசிய விருது வழங்கும் குழுவில் சரியான தமிழ் திரைப்படங்களை அடையாளம் கானக்கூடிய நடுவர் தேவை என இரண்டு முறை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், சரியான நடுவர் இல்லாததால்தான் தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காமல் போனதற்க காரணம் என கூறியிருக்கிறார்” இவர் ‘குற்றம் கடிதல்' படத்திற்காக தேசிய விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com